பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி, தெலுங்கில் வருண் தேஜ் ஜோடியாக ‘லோஃபர்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும் கூட, இந்தியில் ‘எம்.எஸ்.தோனி’, ‘பாகி 2’, ‘பாரத்’, ‘ராதே’, ‘யோதா’, ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் கடந்த ஆண்டு ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து...
பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி, தெலுங்கில் வருண் தேஜ் ஜோடியாக ‘லோஃபர்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும் கூட, இந்தியில் ‘எம்.எஸ்.தோனி’, ‘பாகி 2’, ‘பாரத்’, ‘ராதே’, ‘யோதா’, ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் கடந்த ஆண்டு ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அவர் நடித்த காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதனால், திஷா பதானிக்கு தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கான புதுப்பட வாய்ப்புகள் பறிபோனது. தற்போது ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படங்களின் மூலமாக மக்களிடம் அவர் பிரபலமாகிறாரோ இல்லையோ, வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஓவர் கிளாமருடன் கூடிய போட்டோக்களை பதிவிடுகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்கள் மிரட்டலாக இருப்பதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.