Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டித் தந்த நடிகர்கள்

சென்னை: வந்தவாசி அருகே உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் பாலா ஆகியோர் இணைந்து கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் முன்னாள் மாணவர்களின் முயற்சியால், மாற்றம் சேவை அறக்கட்டளை நிறுவனர் ராகவா லாரன்ஸ் மற்றும் சமூக சேவகரும் நடிகருமான பாலா ஆகியோர்களின் ஏற்பாட்டில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதை இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் லாரன்சையும் பாலாவையும் பாராட்டி வருகிறார்கள்.