Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அரசு பஸ் ஓட்டிய பால கிருஷ்ணா: வீடியோ வைரல்

அமராவதி: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இவர், அம்மாநில இந்துப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கிறார். ஆந்திராவில் ஸ்ரீசக்தி என்ற பெயரில் மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்துப்பூர் தொகுதியில், பாலகிருஷ்ணா அந்த திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துக்கு இடையே தொடங்கி வைத்தார். இணை ஆட்சியர் அபிஷேக் குமார் தேசியக் கொடியை அசைத்ததும் நடிகர் பாலகிருஷ்ணாவே பேருந்தை ஓட்டினார். அதில் ஏறிய பெண் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். ரசிகர்கள் ‘ஜெய் பாலையா’’என்று கோஷமிட்டனர். பேருந்து நிலையத்திலிருந்து சவுடேஸ்வரி காலனியில் உள்ள தனது இல்லம் வரை பாலகிருஷ்ணா பேருந்தை ஓட்டிச் சென்றார். இதைச் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.