Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் குமார்

சென்னை: நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், தற்போது கொங்கு நாடு ரீஃபிள் கிளப் நிறுவனர் கே.எஸ்.செந்தில் குமாருடன் இணைந்து, திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள கேஆர்சி ஃபயரிங் ரேஞ்சில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக ட்ரோன் பயிற்சி மேற்கொண்டு, கல்லூரி மாணவர் களுக்கு அதுகுறித்த பயிற்சி வகுப்பு நடத்திய அஜித் குமார், பிறகு கார் பந்தயத்தில் தனது அணியினருடன் ஈடுபட்டு பரிசுகள் வென்று வருகிறார்.