தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், வெளிநாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் தனது அணி சார்பில் பங்கேற்று பரிசுகள் வென்றார். இந்நிலையில் அவர், கொங்குநாடு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து வெளியான வீடியோவில், ரைபிள் கிளப் நிறுவனர் செந்தில் குமாருடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
‘குட் பேட் அக்லி’ என்ற படத்துக்கு பிறகு புதிய படத்தில் நடிக்காத அஜித் குமார், கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார். முன்னதாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித் குமார், இலக்கை குறிபார்த்து சுடும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
