Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு மாஜி மனைவி வாழ்த்து

தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் வழங்கப்படுகிறது. அதன்படி 71வது தேசிய தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ஆகியோர் நடித்த ‘பார்க்கிங்’ படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு வழங்கப்பட்டது. இந்த வரிசையில் சிறந்த தமிழ் இசையமைப்பாளருக்கான தேசிய விருது ‘வாத்தி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டது.

முன்னதாக ‘சூரரை போற்று’ படத்தின் இசைக்காக முதன்முறையாக தேசிய விருது பெற்றார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதற்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஜி.வி.யின் மாஜி மனைவி சைந்தவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சைந்தவி வெளியிட்டுள்ள பதிவில், “2வது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றதில் நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மதிப்புமிக்க நடுவர் குழு மற்றும் தேர்வுக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்த அழகான பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக ‘வாத்தி’ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் படத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்த என் சகோதரர் தனுஷுக்கு சிறப்பு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு ஒரு பெரிய நன்றி. தொடர்ந்து எனக்கு ‘லக்கி பாஸ்கர்’ மற்றும் அடுத்தடுத்த படங்களிலும் வாய்ப்பு தருகிறார்” என பதிவிட்டுள்ளார்.