Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘‘ஹனுமன்’’ புகழ் தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

தேஜா சஜ்ஜா - கார்த்திக் கட்டமனேனி - டி. ஜி. விஸ்வ பிரசாத் - கிருத்தி பிரசாத் - பீப்பிள் மீடியா ஃபேக்டரி - கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய் ' படத்தின் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' எனும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

'ஹனுமான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் தேஜா சஜ்ஜா நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி பரபரப்பையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது. தற்போது இந்த பாடலின் முழு லிரிக்கல் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடலாசிரியர் டி. மோகன் குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு பின்னணி பாடகர் சாய் சரண் பாஸ்கரூணி குரல் கொடுத்திருக்கிறார்.

'மிராய்' படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரியா சரண், ஜெயராம் , ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி 'மிராய்' படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். படத்தின் திரைக்கதையை கார்த்திக் கட்டமனேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனங்களில் பங்களிப்பு செய்திருக்கிறார்.

கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலா, இப்படத்திற்கு சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.‌ செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் எட்டு மொழிகளில் 'மிராய்' வெளியாகிறது. மேலும் இந்தத் திரைப்படம் 2D மற்றும் 3D தொழில்நுட்பங்களில் வெளியாகிறது.