Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விஜய் வர்மாவுடன் இருந்தால் மகிழ்ச்சி: தமன்னா நெகிழ்ச்சி

மும்பை: பாலிவுட் நடிகருடன் இருக்கும்போது என்னை நானே மறக்கிறேன் என்கிறார் தமன்னா. லஸ்ட் ஸ்டோரி 2 வெப்சீரிஸில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா நடித்துள்ளார். இருவரும் சில மாதங்களாக டேட்டிங்கில் உள்ளனர். இது குறித்து தமன்னா கூறும்போது, ‘விஜய் வர்மாவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவருடன் இருக்கும்போது என்னையே நான் மறந்துவிடுகிறேன்.

சிரித்தபடியே இருக்கிறேன். அவர் ஒரு சந்தோஷக் களஞ்சியம். இதையெல்லாம் சொல்வதால் நான் காதலில் விழுந்துவிட்டதாக எண்ணுகிறார்கள். இதை கேட்டு நான் சிரிக்கிறேன். அதே சமயம், அனைவருக்கும் சொந்த வாழ்க்கை என ஒன்று இருப்பதை அறிந்துகொள்ளுங்கள்’ என்றார்.