Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தபால்காரர் குலசாமியாக மாறிய கதை ‘ஹர்காரா’

சென்னை: ‘வி1 மர்டர் கேஸ்’ என்ற படத்தை தொடர்ந்து கலர்ஃபுல் பீட்டா மூவ்மென்ட் தயாரித்துள்ள படம், ‘ஹர்காரா’. இதற்கு முன்பு ‘வி1 மர்டர் கேஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்த ராம் அருண் காஸ்ட்ரோ, இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரே இந்தியாவின் முதல் தபால்காரர் வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக காளி வெங்கட் நடித்துள்ளார். தவிர, கன்னட நடிகை கவுதமி சவுத்ரி, இயக்குனர்கள் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்துள்ளனர். என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ், அரவிந்த் தர்மராஜ், தீனா தயாரித்துள்ளனர். பிலிப் ஆர்.சுந்தர், லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராம் சங்கர் இசை அமைத்துள்ளார்.

இப்படம் குறித்து ராம் அருண் காஸ்ட்ரோ கூறும் போது, ‘தற்காலத்தில் கூட டிஜிட்டல் வசதிகள் இல்லாத ஒரு மலைக்கிராமத்துக்கு செல்லும் ஒரு போஸ்ட்மேன் சந்திக்கும் பிரச்னைகளையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கையையும் மையப்படுத்திய இந்தப் படத்தில், 1880களில் ஒரு பகுதி கதை, 2023ல் இன்னொரு பகுதி கதை நடக்கிறது. இந்தியா வின் முதல் தபால்காரர் பற்றிய புதிய விஷயங்கள் கையாளப்பட்டு, அஞ்சல் துறையின் அவசியம் மற்றும் மேன்மை குறித்து சொல்லி இருக்கிறோம். தபால்காரர் எப்படி அந்த மக்களுக்கு குலசாமியாக மாறினார் என்பது கதை. தபால்காரர் களின் தன்னலமற்ற சேவைபற்றி இன்றைய தலைமுறை யினருக்கு தெரியப்படுத்தும் இப்படத்தின் ஷூட்டிங் தேனி, குரங்கனி மலைப்பகுதிகளில் நடந்துள்ளது’ என்றார்.