Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹரி ஹர வீர மல்லு 3வது பாடல் வெளியானது

ஐதராபாத்: ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3வது பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இயக்குனர் ஜோதி கிருஷ்ணா பேசுகையில், ‘‘முதலில் இந்த படத்தில் நான் தயாரிப்பாளராக தான் இருந்தேன். இந்த கதையை முதலில் இயக்குனர் க்ரிஷ் இயக்கி வந்தார்.

அவர் விலகியதும், அவருடைய கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து, பதினாறாம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தையும் புனைவு கதையையும் சேர்த்து ஹிஸ்டாரிக்கல் ஃபிக்‌ஷன் படமாக இயக்கியுள்ளேன். ஹரி ஹர வீர மல்லு கேரக்டரில் பவன் கல்யாண் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முகலாய பேரரசான ஔரங்கசீப்பாக பாபி தியோல் நடித்துள்ளார்’’ என்றார்.