Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவானார்

‘சட்டமும் நீதியும்’ என்ற வெப்தொடர், ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 18ம் தேதி ஒளிபரப்பாகிறது. இதில் 15 வருட இடைவெளிக்கு பிறகு ‘பருத்திவீரன்’ சரவணன் ஹீரோவாகவும், நம்ரிதா எம்.வி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். பாலாஜி செல்வராஜ் இயக்க, 18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். இந்த வெப்தொடர், குரலற்றவர்களின் குரல் என்ற கருத்தில் இருந்து உருவாகியுள்ளது.

நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களுடைய குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அதை உடைத்து தனது உரிமைக்கும், மற்றொருவருடைய நலனுக்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதனின் கதை இது. மனதை உலுக்கும் நீதிமன்ற காட்சிகள், உணர்வுகள் சூழ்ந்த கதாபாத்திரங்கள் மற்றும் முக்கியமான மெசேஜ் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது.