Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மனஇறுக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்: விஜய் ஆண்டனி உருக்கம்

சென்னை: ‘அருவி’, ‘வாழ்’ ஆகிய படங்களை தொடர்ந்து அருண் பிரபு எழுதி இயக்கியுள்ள படம், ‘சக்தித் திருமகன்’. ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டனி இசை அமைத்து ஹீரோவாக நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் 25வது படம். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்க, பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

நேற்று முன்தினம் விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாள் என்பதால், கேக்கிற்கு பதிலாக பிரியாணி வெட்டி கொண்டாடப்பட்டது. அவரது ‘மார்கன்’ படம் ஹிட்டானதால், மூடநம்பிக்கையை மறுக்கும் வகையில் மேடையில் ஆமை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தனஞ்செயன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ஹீரோயின் திருப்தி, மாஸ்டர் கேசவ், ஆடை வடிவமைப்பாளர் அனுஷா மீனாட்சி பங்கேற்றனர். அப்போது விஜய் ஆண்டனி பேசியதாவது:

தற்போது நான் மன இறுக்கத்தில் இருந்து வெளியே வந்து அனைவரிடமும் காமெடியாகவும், ஜாலியாகவும் பேசுகிறேன். எனது கால்களில் செருப்பு அணிவது இல்லை என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அருண் பிரபுவுக்கு சர்வதேச அளவில் படம் இயக்கக்கூடிய வல்லமை இருக்கிறது. எனது தயாரிப்பு நிறுவனம் அவருக்காக எப்போதுமே திறந்திருக்கும். இப்படம் அரசியல் பேசுகிறது. நான் அரசியல் புரோக்கர் வேடத்தில் நடித்துள்ளேன்.