சென்னை: ‘எதை தேடுகிறாயோ, அதுவும் உன்னையே தேடுகிறது’ என்ற கருத்துடன் உருவாகி வரும் படம், ‘அகரா’. இதை எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்.பி.நக்கீரன், கோவை டாக்டர் கே.கண்ணன் தயாரிக்கின்றனர். ஜீவா பாரதி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். இதில் ஹீரோவாக எம்.பி.நக்கீரன், ஹீரோயினாக லிபியாஸ்ரீ நடிக்கின்றனர்.
மற்றும் நிஷாந்த், ஜீவா பாரதி, கோவை டாக்டர் கே.கண்ணன், ரங்கராஜ் சுப்பையா, செந்தில், தங்கவேல், ரமேஷ் ராதா, ஆர்.பிரபு, ஜெ.கணேஷ் குமார், செந்தில் குமரன், இனியன் உள்பட பலர் நடிக்கின்றனர். யு.எம்.ஸ்டீவன் சதீஷ் ஒளிப்பதிவு செய்து இசை அமைக்கிறார். அஸ்வின் உமாபதி எடிட்டிங் செய்கிறார். மேகலா மாதேஸ்வரன், அருண் நடனப் பயிற்சி அளிக்கின்றனர். பாலக்காடு, அட்டப்பாடி ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
