தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். கிட்டதட்ட 225 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இவரை ‘மெலடி கிங்’ என ரசிகர்கள் அழைக்கின்றனர். கடைசியாக கடந்த ஜூலை மாதம் வெளியான ‘தேசிங்கு ராஜா 2’ படத்திற்கு இசையமைத்தார். தற்போது படங்களுக்கு இசையமைப்பதை விட கான்சர்ட் நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். வித்யாசாகருக்கு ஹர்ஷவர்தன்...
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். கிட்டதட்ட 225 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இவரை ‘மெலடி கிங்’ என ரசிகர்கள் அழைக்கின்றனர். கடைசியாக கடந்த ஜூலை மாதம் வெளியான ‘தேசிங்கு ராஜா 2’ படத்திற்கு இசையமைத்தார். தற்போது படங்களுக்கு இசையமைப்பதை விட கான்சர்ட் நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். வித்யாசாகருக்கு ஹர்ஷவர்தன் என்ற மகன் உள்ளார். இவரும் முறைப்படி இசை கற்றுக்கொண்டு தந்தையின் இசை கன்சார்டில் பாடி வருகிறார். அதில் இவர் நடனத்துடன் பாடல் பாடுவது இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாகியது. தான் பாடும் பாடல்களில் வரும் ஹீரோ மாதிரி அப்படியே ஆடி ரசிகர்களை மகிழ்விப்பார்.
சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் நடிக்கும் 20வது படத்திற்கு ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் தந்தையை போல இசை துறையில் அறிமுகமாகி நன்றாக வருவார் என எதிரிபார்க்கப்பட்ட ஹர்ஷவர்தன் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவரின் இந்த திடீர் ஹீரோ அவதாரம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். கார்த்தி, தமன்னா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘பையா’ படத்தை போன்று இப்படமும் ரொமான்டிக், டிராவல் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.