Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கேரக்டரில் இருந்து மீள சிகிச்சை பெற்ற ஹீரோ

சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம், ’கைமேரா’. இதை ‘பரமு’, ‘செல்ஃபிஷ்’ ஆகிய படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.என் எழுதி இயக்கியுள்ளார். ‘வச்சுக்கவா’ படத்தில் ஹீரோவாக நடித்த இவர், ‘பரமு’ மூலம் இயக்குனரானார். தமிழ் மற்றும் கன்னடத்தில் ‘செல்ஃபிஷ்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். தற்போது ‘கைமேரா’ படத்தை ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். எல்என்டி எத்திஷ் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக சவுமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார், மாணிக் ஜெய்.என் நடித்திருக்கின்றனர்.

மனித உடம்பிற்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு, மனிதனின் குணம் மிருக குணமாக மாறினால், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. மிருகங்களுக்குள்ளேயே வேறு சில மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு, அதன் குணாதிசயங்கள் எவ்விதம் மாறுபடுகின்றன என்பதை ஆய்வுகள் சொல்கின்றன. அதை மையப்படுத்தியே ‘கைமேரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ‘கைமேரா’ என்பது மராத்திய வார்த்தை. ‘மனோ ராஜ்ஜியம்’ (மரபணுக்கள் மாற்றம்) என்றும் சொல்லலாம். பெங்களூரு, ஹம்பி, ஓசூரில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இப்படத்தின் ஹீரோ அந்த கேரக்டராகவே மாறி நடித்ததால், படப்பிடிப்பு முடிந்து 2 மாதங்கள் பாதிப்புக்குள்ளாகி, அதிலிருந்து மீளவே முடியாமல் தவித்தார். பிறகு மருத்துவ சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். எல்லா பாடல்களும் அனுராதா பட்டுக்கு பிடித்திருந்ததால், 5 மொழிகளிலும் அவரே பாடியுள்ளார். வினோத் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் ராஜா இசை அமைத்துள்ளார். நவீன் எடிட்டிங் செய்ய, சூரி சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.