Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

என்னுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்கள்: ரஜினி கிஷன் ஆதங்கம்

சென்னை: மறைந்த எஸ்.செயின்ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ் தயாரித்துள்ள படம், ‘ரஜினி கேங்’. இதை ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகிய படைப்புகளை தொடர்ந்து எம்.ரமேஷ் பாரதி எழுதி இயக்கியுள்ளார். ரஜினி கிஷன், திவிகா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனீஷ்காந்த், கூல் சுரேஷ், கல்கி ராஜா நடித்துள்ளனர். ப்ளூ என்ற நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.

என்.எஸ்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார். சி.எஸ்.பதம்சந்த், சி.அரியந்த் ராஜ், ரஜினி கிஷன் தயாரித்துள்ளனர். ஊரை விட்டு ஓடிய காதல் ஜோடி திருமணம் செய்துகொண்ட நிலையில், எதிர்பாராமல் அவர்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்களுடன், கமர்ஷியலுடன் கூடிய ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது.

இப்படம் சம்பந்தமான விழாவில் ரஜினி கிஷன் பேசுகையில், ‘மக்கள் மனதில் முன்னணி ஹீரோவாக நிலைக்க வேண்டும் என்பது என் ஆசை. மக்களுக்கு காமெடி மிகவும் பிடிக்கும் என்பதால், இப்படத்தை நானே தயாரித்து நடித்துள்ளேன். ஹீரோயினாக நடிக்க பலரிடம் கேட்டோம். யாரும் சம்மதிக்கவில்லை. இறுதியில் திவிகா வந்தார். என்னுடன் நடிக்க சம்மதித்த அவருக்கு நன்றி. என்னுடன் நடித்த அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்’ என்றார்.