Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகையின் ஹிப்பை பார்த்து லிப்பை கோட்டை விட்ட ஹீரோ: டைரக்டர் பேரரசு பேச்சால் சலசலப்பு

சென்னை: சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு நடித்துள்ளனர். ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை. எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுகவை சேர்ந்த ஈ. புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி, தொழிலதிபர் பிரகாஷ் பழனி, இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு, பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

பேரரசு பேசும்போது, ‘‘பாடல் காட்சிகளைப் பார்த்தோம். கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள். பாடல்களைப் பாடும் போது ஆராதியாவுக்கு லிப் மூவ்மெண்ட் சரியாக இருந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை. கதாநாயகியின் இடுப்பைப் பார்த்துக் கொண்டே ஆடியதால், அதாவது ‘ஹிப்’பைப் பார்த்ததால், ‘லிப்’பை கோட்டை விட்டுவிட்டார்’’ என்றதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.