Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்தியை பிறகு பார்க்கலாம் நாமெல்லாம் திராவிடர்கள்: கேரளாவில் கமல்ஹாசன் பேச்சு

சென்னை: 36 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் கமலுடன் திரிஷா, சிம்பு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான், இசை. கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளன. ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் புரோமோஷனில் பேசிய கமல், ‘‘இந்தியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் அனைவரும் அண்டை மாநிலங்களில் பேசுகின்ற மொழியை கற்றுக் கொள்ளுங்கள். நம் மொழி அழிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. நாம் அனைவருமே திராவிடர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்” என பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.