சென்னை: தமிழில் விஜய் ஜோடியாக ‘கோட்’ படத்தில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் துல்கர் சல்மானின் மனைவியாக நடித்திருந்தார். தமிழில் பல படங்களில் நடித்த இவர், ‘அப்ஸ்டார்ட்ஸ்’ என்ற இந்தி படம் மூலம்தான் 2019ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பிசி நடிகையாக இருந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் இந்தி சினிமாவுக்கு செல்கிறார். ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் ‘ஃபோர்ஸ்’, ‘ஃபோர்ஸ் 2’ ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இப்போது ‘ஃபோர்ஸ் 3’ படத்தில் ஜான் ஆப்ரஹாம் நடிக்க உள்ளார். இப்படத்தை பாவ் துலியா இயக்க உள்ளார். இதில்தான் ஜான் ஆப்ரஹாமுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க இருக்கிறார். இதற்கான ஆடிஷனில் சமீபத்தில் அவர் கலந்துகொண்டு வந்துள்ளார். நவம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
+