Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்தி நடிகருடன் லேகா வாஷிங்டன் லிவிங் டு கெதர்

சென்னை: தமிழில் காதலர் தினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லேகா வாஷிங்டன்.அப்படத்திற்கு பிறகு உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடித்திருக்கிறார்.சினிமாவில் காணாமல் போன இவர் குறித்து தற்போது ஒரு தகவல் வலம் வருகிறது. இவர் பிரபல இந்தி நடிகருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர்கானின் உறவினர் இம்ரான் கான் தான். இது குறித்து நடிகரான இம்ரான் கான் ஒரு பேட்டியில், ‘‘என் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் ஆரோக்கியத்தை லேகா வாஷிங்டன் தான் ஏற்படுத்தினார். நான் மன அழுத்தத்தில் இருந்த போது எனக்கு உதவியாக இருந்தவர் அவர்தான், என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்.அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை என்னால் தொடர முடியுமா’’ என்று தெரியவில்லை என பேசியுள்ளார். தற்போது காதலை இம்ரான் கான் உறுதிப்படுத்த அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இம்ரான் கான் அவந்திகா என்பவரை 2011ம் ஆண்டு திருமணம் செய்து 2019ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.