லாஸ் ஏஞ்சல்ஸ்: புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான ராபர்ட் ரெட்ஃபோர்ட், தனது 89வது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். ‘பட்ச் கேசிடி அண்ட் தி சன்டான்ஸ் கிட்’, ‘தி ஸ்டிங்’, ‘ஆல் தி பிரசிடென்ட்ஸ் மென்’ போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலால் முத்திரை பதித்தவர் ரெட்ஃபோர்ட். திரைப்படத் துறைக்கு பெரும் பங்காற்றிய இவர், புகழ்பெற்ற ‘சன்டான்ஸ் திரைப்பட விழா’வை நிறுவியவர் ஆவார். 1980ம் ஆண்டு ‘ஆர்டினரி பீப்பிள்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும், 2002ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ ஆஸ்கர் விருதையும் வென்றவர். ராபர்ட் ரெட்ஃபோர்டின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் கான், நர்கீஸ் ஃபக்ரி, நடிகர் அனில் கபூர், இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
+