Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை பச்சை குத்திய ஹனி சிங்

மும்பை, ஜூலை 16: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதுகளை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்பை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பிரபல பாடகர் ஹனி சிங்கும் இடம்பெற்றுள்ளார். இவர், ஏ.ஆர். ரஹ்மான் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பெயரை டாட்டூவாக முதுகில் வரைந்து உள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போன்று தனது தாயின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பெயரை கையில், ஹனி சிங் பச்சை குத்தியுள்ளார்.