சென்னை: மணிகண்டன் ஜோடியாக ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர், சான்வே மேக்னா. இப்படம் வெற்றிபெற்றதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் கிளாமர் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த படத்துக்கு பிறகு இசை அமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் ஒன்றில் தோன்றினார். இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்றபோது, அருகில் இருந்த சூடான எண்ணெய் கொட்டி கை முழுக்க படுகாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைகளில் காயம் இருந்தாலும் கூட, கல்லூரி நிகழ்ச்சி ஒள்றில் அவர் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
+