Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹவுஸ் மேட்ஸ் ஹாரர் படமா? கனா தர்ஷன் விளக்கம்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ராஜவேல் இயக்கியுள்ள படம், ‘ஹவுஸ் மேட்ஸ்’. இதில் ‘கனா’ தர்ஷன், காளி வெங்கட், ஹர்ஷா பைஜு, வினோதினி வைத்தியநாதன், அப்துல் லீ நடித்துள்ளனர். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ‘பிரேமம்’ ராஜேஷ் முருகேசன் இசை அமைத்துள்ளார். நிஷார் ஷெரீப் எடிட்டிங் செய்ய, சக்திவேல் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார்.

ராகுல் அரங்கம் அமைக்க, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதியன்று திரைக்கு வரும் இப்படம் குறித்து ‘கனா’ தர்ஷன் கூறியதாவது: இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறியுள்ளது. என்னை நம்பி இந்த மாதிரி கேரக்டரை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. இப்படத்தின் ஐடியா, திரைக்கதை போன்றவை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தது.

இந்த படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட அவருக்கு நன்றி. ஏற்கனவே ‘கனா’ படத்தையும் அவர்தான் வெளியிட்டிருந்தார். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை பார்த்து, இது ஹாரர் படமா என்று கேட்கின்றனர். அதையும் தாண்டி திரைக்கதையில் பல்வேறு ஆச்சரியங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். முழுநீள ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை நாங்கள் உருவாகியுள்ளோம்.