மும்பை: ரஜினியுடன் காலா, அஜித்துடன் வலிமை படங்களில் நடித்தவர் ஹுமா குரேஷி. சமீபத்தில் இவர் விமான நிலையத்திற்கு வித்தியாசமான ஆடையணிந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. டிஷர்ட் அணிந்து சென்ற ஹூமாவின் அந்த ஆடையின் முன்பக்கம் சரியாக காணப்பட்டும் பின்பக்கம் தாறுமாறாக கிழிந்தும் காணப்பட்டுள்ளது. Cotton Balenciaga பிராண்ட்டை சேர்ந்த இந்த டிஷர்ட்டின் விலை சுமார் ரூ. 65000 என்று கூறப்படுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு ஆடையா? அதுவும் இத்தனை ஆயிரமா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
+