Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வேட்டையன் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில், த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் மிக முக்கியமாக ரஜினிகாந்தும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக 1991ஆம் ஆண்டு, இந்தியில் வெளியான ‘ஹம்’ படத்தில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்திருந்தனர். வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.