Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்? சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்

சென்னை: ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிக்க, வீர அன்பரசு இயக்கி நடித்துள்ள படம், ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் கங்கை அமரன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ், பப்லு பிருத்விராஜ், புதுப்பட்டு சக்திவேல், ‘வாழை’ ஜானகி, ஏஞ்சல், ஸ்ரீதேவி கலந்துகொண்டனர். அப்போது கங்கை அமரன் பேசியதாவது:

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா. அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு, வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் பேசும்போது, பல இடங்களில், ‘இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம், என் பாடலே காரணம்’ என்று வைரமுத்து சொல்லி வந்தார்.

இதை கேள்விப்பட்ட நான், உடனே அண்ணன் இளையராஜாவிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை. பிறகு அதை ஆதாரப்பூர்வமாக அறிந்துகொண்ட பிறகு இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் பிரிவு ஏற்பட்டது. இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் விரிசல் ஏற்பட காரணமே, ‘இளையராஜா என்னால்தான் வளர்கிறார்’ என்று வைரமுத்து பொதுமேடைகளில் பேசியதுதான்.