சென்னை: பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்த அமலா பால், பிறகு அவரை விவாகரத்து செய்தார். அதை தொடர்ந்து ஜெகத் தேசாய் என்பவரை மறுமணம் செய்தார். அவர்களுக்கு ‘இலை’ என்ற மகன் இருக்கிறான். இனியஇல்லற வாழ்க்கையை மேற்கொண்டு வரும் அமலா பாலுக்கு முன்பு போல் புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரிரு விளம்பரங்களில் நடித்ததோடு சரி. வெப்தொடரிலும் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் ‘கடாவர்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டு, பொருளாதார ரீதியில் பலத்த
நஷ்டத்தை சந்தித்தார். இனிமேல் சொந்த படம் தயாரிக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளார்.
நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் கிளாமர் போட்டோக்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் அமலா பால், சமீபத்தில் வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகியுள்ளது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘கேரளாவில் ரோட்டோரமாக இருக்கும் கடைகளை, தட்டு கடை என்று சொல்வார்கள். அங்கு நல்ல மஞ்சளாக இருந்தால், நல்ல பழம்பூரி. அந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பழம்பூரி சாப்பிட்டு மகிழ்வேன். அதுபோல், பானிபூரியையும் விரும்பி சாப்பிடுவேன். அப்போது வெட்கமே இல்லாமல் மாஸ்க்கை கழற்றிவிடுவேன். அங்கு சாப்பிட வருபவர்கள், என்னை பார்த்துவிட்டு, ‘அட... அமலா பால்’ என்று ஆச்சரியமாக பேசுவார்கள். ஆனால் நான், அதெல்லாம் இல்லை என்று ஃபன் செய்வேன். கேரளாபகுதியிலுள்ள ரோடுகளில் காரில் பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றார்.