Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்தியன் பனோரமாவில் ஆநிரை குறும்படம்

சென்னை: 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமா, வரும் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. இதில் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை தமிழ் குறும்படம் தேர்வாகி இருக்கிறது. இப்படம் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது: உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த ஆநிரை. இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி என்றார்.