Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இன்ஸ்டாகிராமில் தனுஷ் சகோதரிகளை பின்தொடரும் மிருணாள் தாக்கூர்

சென்னை: தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. சமீபகாலமாக இருவரும் டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது சந்தித்துக் கொண்டனர். அவர்கள் நெருக்கமாக இருந்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் தனுஷை விட மிருணாள் 9 வயது சிறியவர் என ஒரு பக்கம் நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டனர்.

தற்போது இந்த காதலை உறுதி செய்யும் வகையில் இன்ஸ்டாகிராமில் தனுஷின் இரு சகோதரிகளான கார்த்திகா மற்றும் விமலா ஆகியோரை மிருணாள் தாக்கூர் பின்தொடரத் தொடங்கியுள்ளார். பதிலுக்கு, அவர்களும் மிருணாளைப் பின்தொடர்கின்றனர். இதன்மூலம் மிருணாளை ஏற்கனவே தனது வீட்டில் தனுஷ் அறிமுகம் செய்துவைத்து விட்டார் என்று தெரிகிறது. இதுவரை இருவரும் எந்த படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை என்பதால் இந்த தகவல்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.