Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இடைவேளை இல்லாமல் உருவாகும் படம் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் பிரெய்ன்

சென்னை: கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ்பெற்ற தமிழரான ஆர்ஜே சாய், தனது பிறந்தநாளான நேற்று முன்தினம் 2 தமிழ்ப் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அவரது ஆர்ஜே சாய் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படங்களுக்கு ‘பிரெய்ன்’, ‘ஷாம் தூம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பிரெய்ன்’ படத்தை விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார்.

இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் ‘தாதா 87’, ‘பவுடர்’, ‘ஹரா’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. கன்னடத்தில் உருவாகும் ‘ஷாம் தூம்’ படத்தை ‘கடைசி தோட்டா’ நவீன் குமார் இயக்குகிறார். ‘ஷாம் தூம்’ படத்தின் கதை, திரைக்கதையை ஆர்ஜே சாய் எழுதியுள்ளார். இவ்விரு படங்களும் அடுத்த ஆண்டு திரைக்கு வருகின்றன.

இது குறித்து ஆர்ஜே சாய் கூறுகையில், ‘கனடாவில் வசித்தாலும், தமிழ்ப் படவுலகில் சாதிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

‘பிரெய்ன்’, ‘ஷாம் தூம்’ ஆகிய படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. சிம்லா, கனடா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார். விஜய்ஸ்ரீ ஜி கூறும்போது, ‘தற்போது ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறேன். இதையடுத்து இடைவேளையே இல்லாமல், ஒன்றரை மணி நேரம் ஓடும் படமாக ‘பிரெய்ன்’ படத்தை இயக்குகிறேன். நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது’ என்றார்.