Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சர்வதேச தரத்தில் உருவான மிராய்: சென்னையில் தேஜா சஜ்ஜா பேட்டி

சென்னை: கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள பான் இந்தியா படம், ‘மிராய்’. தவிர சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகிறது. ‘ஹனுமான்’ தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மனோஜ் மன்ச்சு, ஜெகபதி பாபு, ஸ்ரேயா, ஜெயராம் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. தமிழகத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது. சென்னையில் நடந்த இப்படத்துக்கான நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கல்பாத்தி கலந்துகொண்டார்.

அப்போது தேஜா சஜ்ஜா பேசியதாவது:

வரும் 12ம் தேதி படம் ரிலீசாகிறது. ஆக்‌ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டஸி, எமோஷன், டிவோஷன் நிறைந்த படமாக ‘மிராய்’ உருவாகியுள்ளது. 3 வயது முதல் 80 வயது வரையுள்ள அனைவரும் இப்படத்தை ரசிக்கலாம். ‘மிராய்’ என்றால், ‘எதிர்காலத்தின் நம்பிக்கை’ என்று அர்த்தம். தொடர்ந்து நான் ஃபேண்டஸி படத்தில் நடிக்க, எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் மாறவில்லை என்பதே காரணமாகும்.

இப்படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ‘ஹனுமான்’ படம் பெரிய வெற்றிபெற்றது. அதுபோல், ‘மிராய்’ படமும் மிகப்பெரிய வெற்றிபெறும். அதிவேக சண்டைக் காட்சிகளுக்காக கட்சா மாஸ்டர், நங் மாஸ்டர் ஆகியோரை தாய்லாந்தில் இருந்து வரவழைத்தோம். பிறகு தாய்லாந்து, பாங்காக்கிற்கு சென்று 20 நாட்கள் விசேஷ பயிற்சி பெற்றேன்.