Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சர்வதேச விருதுகள் வென்ற வெள்ளகுதிர

சென்னை: நிஜம் சினிமா தயாரிப்பில், கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற ஹரிஷ் ஓரி அர்த்தனாரி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வெள்ளகுதிர’. ராம் தேவ் ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசிவகன் இசை அமைத்துள்ளார். ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் உதவியாளர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

தவறான சிந்தனையும், செயலும் கொண்ட ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நகரத்தில் இருந்து தனது மலைக்கிராமத்துக்கு செல்கிறான். அங்குள்ள சூழலை பயன்படுத்தி தவறான வழியில் செல்கிறான். இறுதி யில் அந்த ஊர் மக்களுக்கு அவன் என்ன செய்கிறான் என்பது கதை. சர்வதேச அளவில் ஏராளமான விருதுகள் பெற்றுள்ள இப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது.