Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நெருக்கமான காட்சிகளில் நடிப்பது ஏன்? தமன்னா

மும்பை: அதிகமான சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான தமன்னா, நடிக்க வந்த புதிதில், ‘கவர்ச்சியாகவும், லிப்லாக் காட்சியிலும் நடிக்க மாட்டேன்’ என்று கறாராக சொல்லியிருந்தார். தற்போது அந்த கொள்கையை மாற்றிக்கொண்டு, நெருக்கமான மற்றும் முத்தக்காட்சியில் நடித்து வருகிறார். 2023ல் நெட்பிளிக்ஸில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற வெப்தொடரில், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

தற்போது திரைப்படம் மற்றும் வெப்தொடரில் கவர்ச்சியாக நடித்து வரும் தமன்னா, இதுகுறித்து அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அது வருமாறு: நடிகையாக எனது பயணத்தை நான் தொடங்கியபோது, சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டதால், சவாலான பல கேரக்டர்களையும், அழுத்தமான பல படங்களையும் தவறவிட்டேன் என்ற உணர்வு ஏற்பட்டது.

அதனால்தான் எனக்கு நானே விதித்துக்கொண்ட ‘நோ கிஸ்’ உள்பட சில கட்டுப்பாடுகளை உடைத்தேன். இப்படிப்பட்ட செக்ஸி மற்றும் அந்தரங்க காட்சிகள் 100 சதவீதம் போலியானவை. இது முழுக்க, முழுக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.  படப்பிடிப்பில் ‘இன்டிமஸி கோச்’ ஒருவர் இருப்பார்.

நடிகர்களிடம், எந்தெந்த இடங்களை தொடக்கூடாது என்று முன்கூட்டியே சொல்வார். பிறகு அவர் சொன்னபடி நாங்கள் நடிப்போம். எல்லா விஷயங்களையும் படப்பிடிப்பு குழுவினருக்கு முன்னிலையில், நடனம் ஆடுவது போல், பயிற்சியாளர் சொன்ன ஸ்டெப்ஸ்களை பின்பற்றுவோம். காட்சிகளின் தேவைக்கேற்ப, அதிகமான நம்பகத்தன்மையுடன் நடிப்பவரே உண்மையான நடிகை என்று நினைக்கிறேன்.