Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ‘ரூம் பாய்’

தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியில் பயின்ற ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம், ‘ரூம் பாய்’. கடந்த 2002ல் ‘தாத்தா’ என்ற குறும்படத்துக்காக சிறந்த ஒலிப்பதிவுக்கான தமிழ்நாடு அரசின் விருது பெற்ற ஜெகன் ராயன், 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கியுள்ளார். ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள ‘ரூம் பாய்’ படத்தில் சி.நிகில், ‘அரண்மனை 4’ ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் நடித்துள்ளனர்.

சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சூரியமூர்த்தி பாடல்கள் எழுதியுள்ளார். வேலன் சகாதேவன் இசை அமைக்க, டி.வி.மீனாட்சி சுந்தர் எடிட்டிங் செய்துள்ளார். தினா நடனப் பயிற்சி அளிக்க, கார்த்திக் வர்மன் சண்டை காட்சி அமைத்துள்ளார். திருப்பத்தூர், ஏலகிரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.