Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டூரிஸ்ட் பேமிலி படம் மீது வழக்கா? மவுனம் கலைத்தார் தியாகராஜன்

சென்னை: இயக்குனர் தியாகராஜன் இயக்கி தயாரித்து பிரஷாந்த் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மம்பட்டியான்’. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த டைட்டில் டிராக் ‘மலையுரு நாட்டாம’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலை சமீபத்தில் கூட ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதுவும் அந்த பாடல் இப்படத்தில் வந்தவுடன் திரையரங்கமே அதிர்ந்தது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம்பெற்றிருந்த மம்பட்டியான் பாடலுக்கு நீங்கள் காசு கேட்கவில்லையா என தியாகராஜனிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தியாகராஜன், ‘‘மம்பட்டியான் பட பாடலை பயன்படுத்துவதற்கு அனுமதி எல்லாம் வாங்கவில்லை. பலரும் என்னிடம் அவர்கள் மீது வழக்கு போடுங்க, பணம் கேளுங்க என்று சொன்னாங்க. எனக்கு அந்த மாதிரி தோணவே இல்ல. அந்த பாடல் மறுபடியும் ஹிட் ஆனதுக்கு நான்தான் காசு கொடுக்கணும்’’ என கூறியிருந்தார்.