Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிரிக்கெட் வீரருடன் ஈஷா குப்தா காதலா?

பாலிவுட் நடிகை ஈஷா குப்தா, தமிழில் ‘யார் இவன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை ரகசியமாக காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. கடந்த 2020ல் இந்தி நடிகை நடாஷாவை ஹர்திக் பாண்டியா காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறான். பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா, நடாஷா விவாகரத்து மூலம் பிரிந்தனர்.

இந்நிலையில் ஈஷா குப்தா அளித்துள்ள பேட்டியில், ‘கடந்த 2018ல் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் நானும், ஹர்திக் பாண்டியாவும் நேரில் சந்தித்தோம். அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் வரை நல்ல நட்புடன் பழகினோம். ஆனால், டேட்டிங் செய்யவில்லை. நாங்கள் டேட்டிங் கட்டத்தை அடைவதற்கு முன்பே அந்த உறவு முறிந்துவிட்டது. அவர் என்னுடையவர் அல்ல என்பதை உணர்ந்தேன். இதுதான் உண்மை. நாங்கள் காதலித்தோம் என்பது பொய்யான செய்தி’ என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த சில ரசிகர்கள், ‘ஈஷா குப்தாவை ஹர்திக் பாண்டியா மிஸ் செய்துவிட்டாரே’ என்று கவலைப்பட்டு கமென்ட் வெளியிட்டுள்ளனர்.