Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆர்.கண்ணன் இயக்கத்தில் இவன் தந்திரன் 2

சென்னை: ‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ என்ற ஹாரர் படத்தைத் தயாரித்து, இயக்கி இருக்கிறார். இந்தப் படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. 2017-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ‘இவன் தந்திரன்-2’ என்கிற பெயரில் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார் கண்ணன். ‘கே.ஜி.எஃப்’ சரண் நாயகனாக நடிக்கிறார். சஷாங்க் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். சிந்து பிரியா, சமுத்திரக்கனி. தம்பி ராமையா, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பாடல்களை சிவா ஆனந்த் எழுதுகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.