சென்னை: மங்காத்தா மூவிஸ் சார்பில் ரவி தயாரிக்க, ராஜநாதன் பெரியசாமி கதை எழுதி இயக்கியுள்ள படம், ‘கம்பி கட்ன கதை’. திரைக்கதை, வசனம் எழுதி முருகானந்தம் இணை இயக்கம் செய்துள்ளார். நட்டி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சனி நாயர், வர்ஷினி, சிங்கம்புலி நடித்துள்ளனர். எம்.ஆர்.எம்.ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் செல்வம் இசை அமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் 17ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து நட்டி கூறியதாவது:
‘சதுரங்க வேட்டை’ படத்தில் நான் ஏற்றிருந்த கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பு இன்றுவரை தொடர்கிறது.
மீண்டும் அதுபோன்ற ஒரு கதையில் என்னை பார்க்க விரும்பிய ரசிகர்களுக்கு ஒரு அல்டிமேட் கதையில் காமெடி கலந்து, படம் முழுக்க ரகளை செய்துள்ளேன். ஒரு நடிகன் குறிப்பிட்ட எல்லைக்குள் தன்னை சுருக்கிக்கொள்ள கூடாது. எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். அதுதான் என் பாலிசி. கண்டிப்பாக இப்படம் 100 சதவீதம் ரசிகர்களை ஏமாற்றாது என்று உறுதி அளிக்கிறேன்.