Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூ.200 கோடி மோசடியில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகரின் ஆவணப் படத்தில் ஜாக்குலின்

மும்பை: ரூ.200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகரின் வழக்கு விசாரணை ஆவணப் படமாக உருவாகிறது. இதில் நடிக்க பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் பேச்சு நடக்கிறது.

சுகேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரது கள்ளக் காதலியாக ஜாக்குலின் இருந்து வந்தார். இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில்தான் சுகேஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாக்குலினும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வைத்து ஆவணப் படம் ஒன்றை நெட்பிளிக்ஸ் தயாரிக்க உள்ளது. இதில் நடிக்கும்படி ஜாக்குலினை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சீக்கிரமே பதில் சொல்வதாக ஜாக்குலின் கூறியுள்ளார். இதில் நடிப்பதால் இந்த வழக்கில் தனக்கு பாதகமான விஷயங்கள் நடந்துவிடக் கூடாது என்று ஜாக்குலின் பயப்படுகிறாராம். அதனால் தனது வக்கீலிடம் ஆலோசனை பெற்று, நடிப்பதா, வேண்டாமா என அவர் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.