Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காதலனுடன் மண்டியிட்டு மலையேறிய ஜான்வி கபூர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைபாதையில் காதலனுடன் நடிகை ஜான்விகபூர் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தார். ஜான்விகபூர், தனது காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி வந்து சென்ற அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘திருப்பதி கோயிலுக்கு செல்வது இது 50வது முறை. ஓரி ஏறுவது இதுவே முதல் முறை. நிறையபேர் இது பயணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது வாழ்க்கையின் இலக்கினை சொல்லித்தருவது.

இது முன்னேறுவதை பற்றியது. வாழ்க்கை என்பது முன்னேறுவதை பற்றியதுதான். திருப்பதி மலை ஏறும் அனுபவத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும். ஏனென்றால், அது உங்களை பணிவுடன் நினைக்க வைக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என்றார். கடந்த காலங்களில், ஜான்வி கபூர், தனது தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி குஷி கபூருடன் அடிக்கடி திருப்பதிக்கு வருவார். 50வது முறை தனது காதலனுடன் வந்து ஏழுமலையானை தரிசித்து அதனை டாக்குமென்ட்ரி படமாக வீடியோ பதிவு செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.