தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தியில் நடித்த ‘பரம் சுந்தரி’ என்ற படம், கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், ‘எதிர்காலத்தில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை’ என்றார். அதற்கான காரணத்தை கேட்டபோது, ‘இரண்டு பிள்ளைகள் என்றால், அவர்களுக்கு இடையே சண்டை வரும். அதனால், அந்த சண்டையை விலக்கிவிட மூன்றாவதாக ஒருவர் தேவை. அதனால்தான் மூன்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்றார்.
அவரது கருத்து இணையதளங்களில் வைரலானது. இந்தியில் வருண் தவான் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ள ‘சன்னி சன்ஸ் காரி கி துளசிகுமாரி’ என்ற படம், திருமணம் சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரிடம், ‘எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், ‘இப்போது எனது திட்டம், எண்ணம் எல்லாமே சினிமாவை பற்றியே இருக்கிறது. எனவே, என் திருமணத்தை பற்றி திட்டமிடவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது’ என்றார். திருமணத்தை திருப்பதி கோயில் வளாகத்தில், மிகவும் எளியமுறையில் நடத்த விரும்புவதாக அவர் அடிக்கடி சொல்லி வருகிறார்.