Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘ஓமன்’ படத்தின் தமிழ் பதிப்புதான் ஜென்ம நட்சத்திரம்: தமன் தகவல்

சென்னை: ’ஒரு நொடி’ படக்குழுவினர் மீண்டும் இணைந்துள்ள படம், ’ஜென்ம நட்சத்திரம்’. ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், ‘ஓமன்’ என்ற படத்தின் தமிழ் பதிப்பாகும். மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ், வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன், ஒளிப்பதிவாளர் கேஜி, கலை இயக்குனர் ராம், எடிட்டர் குரு சூர்யா, நடிகர்கள் தலைவாசல் விஜய், சிவம், அருண் கார்த்தி, மைத்ரேயன், ஈரோடு மகேஷ், நடிகைகள் ரக்‌ஷா, மால்வி மல்ஹோத்ரா, கரூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் பரணி பால்ராஜ், பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோஸ் முரளி, இயக்குனர்கள் ‘லெவன்’ லோகேஷ், அறிவழகன், மீரான், இசை அமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் கலந்துகொண்டனர்.

படத்தின் ஹீரோ தமன் பேசுகையில், ‘ஆங்கிலத்தில் வெளியான ’எக்ஸோர்சிஸ்ட்’, ‘ஓமன்’, ‘போல்டர்ஜிஸ்ட்’ உள்பட பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கிறது. ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் கிட்டத்தட்ட ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல் இருக்கும்’ என்றார்.