Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹாரர் கதையாக ஜென்ம நட்சத்திரம்

சென்னை: ஜென்ம நட்சத்திரம் பெயரில் புது ஹாரர் படம் உருவாகிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை நேற்று மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் வெளியிட்டுள்ளது படக்குழு.

படம் குறித்து பேசிய இயக்குநர் பி. மணிவர்மன், ‘‘முந்தைய ஜென்ம நட்சத்திரம் போன்றே, இந்தப் படமும் பேசும் படியாக இருக்கும். இந்தப் படத்திற்கான தலைப்பு அதன் அசல் ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம்.666 என்ற எண் படத்திலும் பயன்படுத்தியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரிக்கிறார். ஒளிப்பதிவு கே.ஜி. இசை, சஞ்சய் மாணிக்கம். படத்தொகுப்பு, எஸ். குரு சூரியா. தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று விரைவில் உலகமெங்கும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார்.