Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜப்பானுக்கு பறந்த மீனாட்சி சவுத்ரி

பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி, கடந்த 2018ம் ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றார். நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் திரையுலகிற்கு வந்தார். ‘அப்ஸ்டேர்ஸ்’ என்ற இந்தி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான அவர், பிறகு ‘இச்சாத வாகனமுலு நிலுபரடு’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து ‘கில்லாடி’, ‘ஹிட்: தி செகண்ட் கேஸ்’, ‘குண்டூர் காரம்’ உள்பட சில படங்களில் நடித்தார். விஜய் ஆண்டனியின் ‘கொலை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஆர்ஜே பாலாஜியுடன் ‘சிங்கப்பூர் சலூன்’, வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ ஆகிய படங்களில் நடித்தார். துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த ‘லக்கி பாஸ்கர்’, வெங்கடேஷுடன் நடித்த ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் படவுலகில் முன்னணி இடத்தை பிடித்து, அதிக சம்பளம் வாங்கும் மீனாட்சி சவுத்ரி, தனது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவர் வெளியிடும் கிளாமர் போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகின்றன. தற்போது ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள மீனாட்சி சவுத்ரி, அங்கு எடுத்த சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். டோக்கியோ கடை வீதிகள், முக்கிய சாலைகள், பிரபலமான மால்களில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.