Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பு நிறுத்தம்?

விஜய், சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, தமன் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. பிறகு அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், நிதி பிரச்னையின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குவதற்கு ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 25 கோடி ரூபாய் வழங்கியதாம் லைகா புரொடக்‌ஷன்ஸ். அத்தொகையை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைவதற்குள்ளேயே ஜேசன் சஞ்சய் செலவு செய்துவிட்டாராம். ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேல் பட்ஜெட் சென்றதால், படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ். இச்செய்தி வேகமாக பரவி வரும் நிலையில், ஜேசன் சஞ்சய்யின் முதல் படமே பட்ஜெட் பிரச்னையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.