பல்வேறு மொழிகளில் நடித்து வருபவரும், மிமிக்ரி கலைஞருமான ஜெயராமின் மகளும், நடிகர் காளிதாஸின் சகோதரியுமான மாளவிகா, தனது தந்தை மற்றும் சகோதரரை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வராதது குறித்து பேசியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயராமும், அவரது மகன் காளிதாஸும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்பு அவர்கள் 2003ல் வெளியான மலையாள படத்தில் இணைந்து நடித்திருந்தனர்....
பல்வேறு மொழிகளில் நடித்து வருபவரும், மிமிக்ரி கலைஞருமான ஜெயராமின் மகளும், நடிகர் காளிதாஸின் சகோதரியுமான மாளவிகா, தனது தந்தை மற்றும் சகோதரரை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வராதது குறித்து பேசியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயராமும், அவரது மகன் காளிதாஸும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்பு அவர்கள் 2003ல் வெளியான மலையாள படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது அவர்கள் நடிக்கும் ‘ஆஷக்கல் ஆயிரம்’ என்ற படத்தின் பூஜையில் கலந்துகொண்ட மாளவிகா, ‘எப்போதுமே நான் சினிமாவில் நடிப்பது பற்றி யோசித்து பார்த்தது இல்லை. நான் திருமணம் செய்துகொண்டதால் நடிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது.
திருமணத்துக்கு முன்பே நான் சினிமாவில் நுழையவில்லை. அதனால், திருமணத்துக்கு பிறகும் அப்படி நான் யோசிக்கவில்லை. அப்பாவும், காளிதாஸும் இணைந்து நடித்து வருவதால், நானும் அதில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறேன். வீட்டில் அவர்கள் மிகச்சிறந்த காம்போவாக இருக்கின்றனர். இப்போது அவர்களை இணைத்து பார்க்கும்போதும், அக்காலத்தில் இருந்த அதே உணர்வுதான் கிடைக்கிறது. அப்பாவையும், காளிதாஸையும் ஒப்பிட முடியாது. அவர்கள் வெவ்வேறு ஆளுமைகள். சினிமா அணுகுமுறையும் வித்தியாசமானது. இரு தனித்துவ ஆளுமைகள் இணையும்போது, திரையில் சிறந்த மாயாஜாலம் நிகழும் என்று நம்புகிறேன்’ என்றார்.