Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜீவஜோதி ராஜகோபாலன் வழக்கு படமாக்கும் த.செ.ஞானவேல்

சென்னை: ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல், ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டார். இப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகிறது. இதையடுத்து ஞானவேல் இயக்கும் படத்துக்கு ‘தோசா கிங் - மசாலா அண்ட் மர்டர்ஸ்’ என தலைப்பிட்டுள்ளார்.

இந்தியில் உருவாகும் இப்படம், சரவணபவன் ராஜகோபாலன், ஜீவஜோதி வழக்கை பின்னணியாகக் கொண்டு உருவாகிறது. ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொன்றதாக ராஜகோபாலன் மீது வழக்கு தொடரப்பட்டது. அதுதான் இப்படத்தின் கதைக்களமாகும். இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடக்கிறது. தமிழில் இப்படம் வெளியாகிறது.