தமன் மனைவி மால்வி மல்ஹோத்ரா கர்ப்பமாக இருக்கிறார். அவரது கனவில் சில பயங்கரமான உருவங்கள் வந்து செல்கின்றன. பாழடைந்த தொழிற்சாலையில் பல கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் காளி வெங்கட், இத்தகவலை தமன் நண்பர்களிடம் சொல்லி, பணத்தை எடுத்து உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டு இறந்துவிடுகிறார். அப்பணத்தை எடுக்க தமன்,...
தமன் மனைவி மால்வி மல்ஹோத்ரா கர்ப்பமாக இருக்கிறார். அவரது கனவில் சில பயங்கரமான உருவங்கள் வந்து செல்கின்றன. பாழடைந்த தொழிற்சாலையில் பல கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் காளி வெங்கட், இத்தகவலை தமன் நண்பர்களிடம் சொல்லி, பணத்தை எடுத்து உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டு இறந்துவிடுகிறார். அப்பணத்தை எடுக்க தமன், மால்வி மல்ஹோத்ரா மற்றும் அவர்களது நண்பர்கள் செல்கின்றனர். அப்போது மால்வி மல்ஹோத்ரா கனவில் வந்த பயங்கரமான உருவங்கள் தென்படுகின்றன. பணத்தை தேடும் தமன், சாத்தான் வழிபாட்டு முறைகளுக்கான தடயங்களை கண்டுபிடிக்கிறார்.
அப்போது நண்பர்கள் ஆபத்தில் சிக்குகின்றனர். அவர்களை தமன் காப்பாற்றினாரா? மால்வி மல்ஹோத்ராவின் கனவுக்கும், அந்த இடத்துக்கும் என்ன தொடர்பு? இச்சம்பவங்களின் பின்னணி என்ன என்பது மீதி கதை. ‘ஓமன்’ என்ற ஹாலிவுட் படத்ைத தழுவி உருவாக்கப்பட்ட இதில், பாழடைந்த தொழிற்சாலைக்குள் தமன் மற்றும் நண்பர்கள் நுழைந்த பிறகு தொடர்ச்சியாக கொலைகள் நடப்பதை சஸ்பென்சுடன் சொல்லி இருக்கிறார், இயக்குனர் பி.மணிவர்மன். அமானுஷ்ய சம்பவங்களை தைரியமாக எதிர்கொள்ளும் தமனும், கெட்ட கனவுகளால் பயப்படும் மால்வி மல்ஹோத்ராவும் சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்ஷனில் தமன் அதிக ஆவேசம் காட்டியுள்ளார்.
மைத்ரேயா, ரக்ஷா ஷெரீன், சிவம், அருண் கார்த்தி ஆகியோர், அந்தந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். காளி வெங்கட், வேல.ராமமூர்த்தி, முனீஷ்காந்த் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். தலைவாசல் விஜய், சந்தானபாரதி, நிவேதிதா, யாசர் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். பாழடைந்த தொழிற்சாலையில் நடக்கும் சம்பவங்களை ரசிகர்கள் பயப்படும் வகையில் ஒளிப்பதிவு செய்து அசத்தியுள்ளார், கே.ஜி. பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் சஞ்சய் மாணிக்கம் மிரட்டி இருக்கிறார். எடிட்டர் எஸ்.குரு சூர்யாவின் பணியும் குறிப்பிடத்தக்கது. சாத்தான் பற்றிய நம்பிக்கை நிஜமானால் என்ன நடக்கும் என்ற கற்பனையை எழுதி இயக்கியுள்ள பி.மணிவர்மன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.