சென்னை: தக் லைஃப் படத்தில் நடித்தவர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த வருடம் ‘பணி’ என்கிற மலையாள படத்தை இயக்கி, நடித்தார். தமிழில் ‘ஜகமே தந்திரம், ரெட்ரோ’ படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். 2021ல் மலையாளத்தில் வெளியான ‘சுருளி’ என்கிற படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தார். லிஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை...
சென்னை: தக் லைஃப் படத்தில் நடித்தவர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த வருடம் ‘பணி’ என்கிற மலையாள படத்தை இயக்கி, நடித்தார். தமிழில் ‘ஜகமே தந்திரம், ரெட்ரோ’ படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். 2021ல் மலையாளத்தில் வெளியான ‘சுருளி’ என்கிற படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தார். லிஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இது குறித்து ஜோஜு ஜார்ஜ் கூறும்போது, “இந்த படம் எனது பெயரை கெடுத்துவிட்டது. அத்துடன் சம்பள பாக்கியும் தயாரிப்பு தரப்பு தரவில்லை. இதனால்தான் 4 வருடங்கள் கழித்து இது பற்றி பேச வைத்துவிட்டார்கள்.
இந்த படத்தில் பல கெட்ட வசனங்கள் இடம்பெற்றன. அதை நான் பேச மறுத்தபோது, திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவும் அங்கு விருதும் வாங்கவும்தான் இதுபோல் யதார்த்த வசனங்களை வைத்துள்ளோம். தியேட்டருக்கு படம் வரும்போது அதை நீக்கிவிடுவோம் என படக்குழுவினர் தெரிவித்தனர். அதை நம்பி நடித்தேன். ஆனால் படத்திலும் இந்த வசனங்கள் வெளியானதால், எனது சொந்த ஊரிலேயே எனது பெயர் களங்கமானது. படத்தின் சம்பள பாக்கியை 4 வருடமாக கேட்டு வருகிறேன். இதுவரை தரவில்லை’’ என்றார்.